Thursday, 28 June 2012

ஜூனியர் ஆர்டிஸ்ட் - என் முதல் அனுபவப் பகிர்வு.


       எனக்கு  நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் நடந்துள்ளது.எதை முதலில் எழுதலாம்னு யோசிக்கும் போது இது தான் ஃபர்ஸ்ட் நியாபகம் வந்துச்சு...
                   டீன் ஏஜ்ல எல்லாரும் அவங்கள ஹீரொவா தான் நினைபாங்க.அதுவும் வெளியில போகும் போது ஆறு தடவ தலை சீவி,மூணு தடவ பௌடெர் அடிச்சு முன்னாடி தல முடிய கொஞ்சம் கலைச்சு விட்டு (என்னயும் சேர்த்து தான் சொல்றேன்.)..தான் கெளம்புவோம். நாம எப்பவும் ஹீரோவாக தான் விரும்புவோம் .சப்பயா ஏதாவது மேட்டெர் சிக்குனா அத செஞ்சுட்டு ஹீரோ ஃபீல் குடுக்கலாம்.நமக்கும் எந்த டேமேஜும் வராது(என்னயும் சேர்த்து தான் சொல்றேன்.).


ஏன்??, படத்துல கூட ஹீரொவ தான் நாம பார்ப்போம்.ஹீரொவுக்காக படம் பார்க்க போறவங்க இருக்காங்க ,பட் எங்கயாவது ஜுனியர் ஆர்டிஸ்டுக்காக படம் பார்க்க போர்ரவங்க இருக்காங்களா?.அப்படி இருந்தா அவங்காந்த ஜுனியர் ஆர்டிஸ்டோட சொந்தகாரங்களா தான் இருப்பாங்க.






               

ரெண்டு வாரம் முன்னாடி
   அம்மா  சொன்னாங்க, "டேய் விஜி,காளி அம்மன் கோவில்ல திருவிழா,கொஞ்சம் வண்டி எடுக்குறயா போய்ட்டு  வரலாம்??".
நானும் உடனே சரினு சொல்லிட்டேன்.

அம்மாக்கு ஆச்சரியம் "என்னடா உடனே சரி சொல்லிட??.சரி இரு ரெடி ஆகிட்டு வரேன்".
  
 அம்மாக்கு தெரியாது, நான் ஏன் உடனே வரேன்னு சொன்னேனு.
அதுக்கு மூணு ரீசன்

1)ரிசல்ட் இன்னும் வரல சொ..சாமி கிட்ட நல்ல ரிசல்டா வந்தா என் ஃப்ரண்ட் சேகர்க்கு மொட்டை அடிக்கலாம் ..இந்த மாதிரி எதாவது ஐஸ் வைக்கலாம் .

2)கோவிலுக்கு வந்தா தான் அம்மா அரிசி மாவு சாப்பிட விடுவாங்க.

3) தாவணி போட்ட வில்லேஜ் பொண்ணுங்கள பார்க்கலாம்.பிகாஸ் ..சென்னைல தாவணிய 1/4 கட் பண்ணி தான் போட்டு வருவாங்க.அங்க தாவணிய பார்க்குறது ரொம்ப கஸ்டம்.
அம்மா ரெடி.நான் பௌடெர் போட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணேன்.

அம்மா கேட்டாங்க "ஏண்டா,கோவில்க்கு தான போறொம்..ஏதோ பொண்ணு பார்க்க போர மாதிரி வெள்ள சட்டைலாம் போட்டு இருக்க?".
நான் ஒரு ஸ்மைல் போட்டு  வண்டில ஏறி உட்கார்ந்தேன் .

கோவில்ல என்டெர் ஆனோம்.ஃபர்ஸ்ட் ரிசல்ட் அப்புறம் தான் தாவணி ..சொ சாமி கிட்ட போனேன்.

சாமி கும்பிட்டு  இருக்கும் போது ஒரு தாவணி போட்ட அக்கா வந்தாங்க ..நல்லா தான் இருந்தாங்க.பட் என்ன விட ஏஜ் அதிகம்.முகம் லட்சணமா இருந்துச்சு.நான் அவங்கள பார்த்துட்டு இருந்தேன் .
 "டேய்........................" நு ஒரு சவுண்டு.



 "ஹையொ நாம பர்க்குரத யரோ பார்துடாங்க போல"னு கண்ண இருக்கமா மூடிகிட்டேன்.

பத்து செகண்ட் கழிச்சு ஐச ஓபென் பண்ணா ..என் பக்கத்துல ,"ஒரு அக்கா சாமி ஆடிட்டு இருக்கு...!!!!!!"

நான் அப்படியே "ஷொக்" ஆகிடேன்.
வாழ்க்கைல ஃபர்ஸ்ட் டைம் சாமி ஆடுரத பார்க்குரேன்.அந்த அக்கா புருஷன் அவங்கள புடிச்சு இழுக்க போனாங்க ...அந்த அக்கா அவங்க புருஷன பார்த்து ஒரு லுக் விட்டுச்சு..அந்த அண்ணன் பயந்து பின்னாடி போய்ட்டாங்க.

பூசாரி வந்தாரு அந்த அக்கா நெத்தில திருனீரு வச்சாரு..அப்பவும் அந்த அக்கா அடங்கல.அப்புறம் கைல ஒரு எலுமிட்சம் பழம் குடுத்தாங்க..அத அந்த அக்கா சாப்பிட்ட ஸ்டைல இன்னும் என்னால மறக்க முடியல...

"உயிருல்ல கோழிய கழுத்த பிடிச்சு கடிச்சு சாப்டுரத நினைச்சு பாருங்க.."அப்படி சாப்பிட்டாங்க.

ஒரு நிமிஷம் தான் அந்த அக்கா அப்படியே நார்மல் ஸ்டேஜ்க்கு வந்துடாங்க.
உடனே பின்னாடி திரும்பி அவங்க புருஷன பார்த்து ,"என்னங்க திருனீரு எடுதுகோங்க" அப்படினாங்க.

அப்போ நான் முடிவு பன்னேன்.சத்தியமா இது நடிப்பு இல்ல...ஏன்னா சிவாஜி,கமல் நால கூட இப்படி நடிக்க முடியாது.

இருந்தும் எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.."அவங்க சாமி ஆடுனத அவங்கனால உணர முடிஞ்சுதா ??".

இத கண்டுபிடிக்க அந்த அக்கா பின்னாடியே போனேன்.பட் தாவணிய மிஸ் பண்ணது தான் மிட்ச்சம்.அந்த சாமி ஆடுன அக்கா தனக்கும் அதுக்கும் எந்த ரீலேசன் இல்லாதது மாதிரி தேங்கா சாப்ட்டு இருந்தாங்க.

அப்புறம் கடுப்பாகி சாமி கும்பிட்டு கோவில்ல சுத்தி வந்தேன்.அம்மாவும் தான்.கோவில் முன்னாடி சாமி பாதம் பதிச்ச ஊஞ்சல் வச்சு இருந்தாங்க.எல்லாரும் அத தொட்டு கும்பிட்டு அதுல சில்லற காசும் வச்சாங்க.நானும் அம்மாவும் லைன்ல போய் நின்னோம்.அம்மாவுக்கு முன்னாடி அஞ்சு பேரு இருந்தாங்க .நான் அம்மா பின்னாடி நின்னேன்.

அம்மாவுக்கு முன்னாடிக்கும் முன்னாடி இருந்த அக்கா சாமி மேல ரொம்ப கடுப்புல இருந்தாங்க போல..அவங்க ஊஞ்சல ஆட்டுன ஆட்டுல ஊஞ்சல்ல இருக்குற காசு எல்லாம் கீழ சிதறி விழுந்துச்சு.அத அந்த அக்கா பார்காம ஊஞ்சல ஆட்டுரதுலயே குறியா இருந்தாங்க.அப்புறம் அந்த அக்கா திரும்பி கூட பார்க்காம போய்டாங்க.
நான் மனசுல நினைசேன் ,"சப்போஸ் ..அந்த காச யாரும் எடுத்து ஊஞ்சல் மேல திரும்ப வைக்கலனா நாம அத எடுத்து வச்சு ...கொஞ்சம் ஹீரோ ஃபீல் காடாலாம்பின்னாடி இருக்குர அண்ணா அக்காலாம் நம்மல பத்தி மனசுல கொஞ்சம் நல்லாத நினைபாங்க".

சாமி புண்ணியத்துல என் அம்மா வரைக்கும் யாரும் அத எடுத்து வைக்கல.இப்போ என் அம்மா டர்ன்.

அம்மா போனாங்க.ரொம்ப நேரம் ஊஞ்சல தொட்டு இருந்தாங்க..வேகமா ஆட்டி விட்டு இருந்தாங்க..விடவே இல்ல..நெரய வேண்டுதல் போல.."சரி ஹீரோ ரோல் சீகிரம் கிடைக்க்குமா?", கொஞ்சம் வெய்ட் பண்ணி தான ஆகனும்.சொ, வெய்ட் பண்ணென்.அம்மா தன் பங்குங்க்கு ஒரு ஒரு ரூபாய்ய தள்ளி விட்டாங்க...(எல்லான் எனக்காக தான்)...என் டர்ன் வந்துச்சு.

                                                                                                


 திடீர்னு ஒரு பாப்பா என் காலுக்கு அடியில புகுந்து ஒடி அந்த ஊஞ்சல சிதறி இருந்த காச எல்லாம் மெதுவா எடுத்து ஊஞ்சல வச்சு ஒரே செகண்ட்ல என்ன ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆகவிட்டு அது ஹீரோ ஆகிடுச்சு?????.

எனக்கு செம பன்...பட் சைலென்ட் பன்..ஏன்னா, இது யாருக்கும் தெரியாதுல??..

என் அம்மா அந்த பாப்பாவ பார்த்து சொன்னாங்க ,"குட் கேர்ள்!!!".

 அந்த பாப்பாவ பத்தி எங்கிட்ட எங்க அம்மா பெருமயா பேசுனானங்க.அப்போ அந்த பாப்பா எங்கள கிராஸ் செஞ்சது.

ரொம்ப நாளா எண்ணெய் வைக்காத தல,அழுக்கு ட்ரெஸ்..பார்க்க பாவமா இருந்துச்சு..அப்போ சுத்தி இருந்த பொண்ணுங்கலாம் கைல பொம்மை பல்லூன்லாம் வச்சு இருந்தாங்க.

எனக்கு சட்டுனு ஒரு ஐடியா வந்துச்சு."அந்த பாப்பாவுக்கு ஒரு கார் பொம்மை வாங்கி குடுத்து ,ஒரு "ஹீரோ ரோல்" இல்லனா கூட "கெஸ்ட் அப்பியரன்ஸாவது" ட்ரை பண்ணாலாம்னு முடிவு பண்ணேன்.ஏன்னா படத்துல கெஸ்ட் அப்பியரன்ஸ்லாம் பெரிய ஹீரோ தான தருவாங்க????.எப்படி நம்ம ஐடீயா???

வெளிய வந்தேன்..கடைய தேடினேன்.ஒரு அக்கா கருப்பு கண்ணாடி மாட்டி ஒரு சின்ன் கட்டில்ல கடை போட்டு இருந்தாங்க.அவங்க கிட்ட போனேன்.

"அக்கா,அந்த ரெட் கலர் கார் பொம்மை எவ்ளோ?"...அந்த அக்கா பேசவில்லை.

"அண்ணா........................." என்று ஒரு சப்தம்.

பின்னாடி திரும்பி ,"நம்மல யாருடா மரியாதயா அண்ணானு கூப்டுரது"னு பார்தேன்.

அதே பாப்பா..ஓடி வந்தது..வேகமாக.

 கட்டில் அடியில் புகுந்து எந்தரித்து "கார் பொம்மை 15ரூபாய் நா" என்றது.

எனக்கு தூக்கி வாரி போட்டது.

அந்த பாப்பாவிடம் கேட்டென்.."எங்க பாப்பா படிக்குர?".

 "நான் படிக்கல நா...இது எங்க கடை தான் ,அம்மாக்கு கண் தெரியாது..வாய் பேச வராது..அப்பா கூலி வேலைக்கு போராரு"

"சாய்ங்காலம் தான் கடை போடுவோம்.."

 நான்,"அப்போ,காலைல ஸ்கூல்க்கு போலாம்ல?"

 "ஸ்கூல்க்கு போலாம் தான் ஆன ,எங்க அப்பா விட மாட்டென்னு சொல்லுராருனா" ,என்றாள் பாவமாக.

அப்பொழுது கடவுள் எனக்கு இரண்டு ரோல் குடுத்தார்..

1)ஹீரோ ரோல்:


                                      
                                  அந்த பெண்ணின் அப்பாவிடம் அந்த பெண்ணை படிக்க வைக்க சொல்லி கையில் பணம் கொஞ்சம் குடுக்கலாம்.

2)ஜூனியர் ஆர்டிஸ்ட்:

                                           
                                   கார் பொம்மையை வாங்கிக்கொண்டு அந்த பெண்ணை நினைத்து கடவுளிடம் வேண்டிக்கொள்வது.

நிட்சயம் ஒரு நாள் நான் ஹீரோ ஆவேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு, "ஹீரொவாக சென்ற நான்..ஜூனியர் ஆர்டிஸ்டாக வீடு திரும்பினேன்..."

அப்பொழுது உணர்தேன்.."ஹீரோ ஆவது அவ்வளவு சுலபம் இல்லை.."

Tuesday, 26 June 2012

என் முதல் சிறுகதை - நெற்றிக் காசு...

                                     சாந்தி அழகான பெண்..சந்தோஷ் சாந்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.பெற்றொர் விருப்பதுடன் தான் கல்யாணம் நடந்தது.இயல்பிலெயே சந்தோஷ் ரொம்ப சாது .சாந்தி தேவை இல்லாமல் வம்புக்கு இழுத்தால் கூட இவன் அமைதியாக தான் இருப்பான்.கல்யாணம் ஆன புதிதில் இருவரும் மிகவும் ஹாப்பியாக தான் இருந்தார்கள்.
                                      
                                      சந்தோஷ் ஒரு தனியார் கம்ப்பனியில் சூபர்வைசராக வேலை செய்கிர்றான்.மாத சம்பளம் வீட்டு லோன் வண்டி லோன் எல்லாம் போக 13,000ரூபாய் வரும்.சாந்தியும் குடும்பத்தை நன்றாக ஆட்சி செய்தால். ஒரு வருடம் களித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.சந்தோஷ் மனதில் ஆண் பெண் என்று பேதம் இல்லை.அதனால் அவன் மகிழ்ச்சியுடன் தன் காதல் பரிசை தூக்கி கொஞ்சினான்.ஆனால் சாந்திக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டதே என்று மனதில் ஒரு ஓரமாய் கவலை.
                                        


                             சந்தோஷ் தன் மகளுக்கு "செல்வராணி" என்று பெயரிட்டான்.செல்வா நல்ல பிள்ளையாக துடிப்புடன்..ஸ்மார்ட் பெண் ஆக 18 வருடம் ஓடியது..செல்வா அழகு பெண் ஆனால்.தாய்க்கு கவலை வந்த்து..பின்ன? செல்வாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாமா?


                             சந்தோஷும் இரவு பகல் பாராமல் வேலை செய்தான் .இதற்க்கு நடுவில் ஒரு காதல் துளிர் விட துவங்கியது.செல்வா ,காதல் வயபட்டாள்.அவன் வேரு யாரும் இல்லை,செல்வாவுடன் கல்லூரியில் படிக்கும் வாசு தான்.நல்ல பையன்.ஆல் பார்க சூரியா மாதிரி இருப்பான்(நான் சூரிய ரசிகன் அல்ல!!).செல்வா தன் காதலை அம்மாவிடம் மட்டும் கூறினாள்.
                               சாந்திக்கு வருத்தம் தான்..ஆனால் இவள் நல்லதொரு வீட்டில் வரதச்சணை கம்மியாக குடுத்து கலியாணம் செய்து வைத்து விடலாம் என்று முடிவில் இருந்தாள்.செல்வா காதலிக்கும் செய்தி கேட்டவுடன் இவளுக்கு மனதில் ஒரு ஆசை.என்னவென்றால், காதலித்து திருமணம் செய்யும் எந்த வீட்டிலும் வரதச்சணை நெறையா கேட்க மாட்டார்கள்,நமக்கும் செல்வு மிட்ச்சம் என்று நினைத்து அவள் காதலுக்கு க்ரீன் லைட் காட்டினால்.
                            ஒரு வழியாக செல்வா கல்லூரி படிப்பை முடித்தாள்.வீட்டில் கலியான பேச்சு ஆரம்ப்பம் ஆனது.தன் காதல் விஷயத்தை தன் தந்தை இடம் கூறினாள்.சந்தோஷை பற்றி தான் நமக்கு தெரியுமே?..தன் பிள்ளையின் வாழ்க்கை தான் இவனுக்கு முக்கியம்.வாசுவை குடும்பத்துடன் பெண் பார்க்க வர சொன்னான்.
                              அது ஒரு வெள்ளிகிழமை.அனைவரும் ஒரு எதிர்பார்புடன் இருந்தார்கள்.மாப்பிள்ளை வீட்டார் வந்தனர்.காபி,பஜ்ஜி,பலகாரம் எல்லாம் முடிந்து ஏப்பம் விட்டனர்.வாசுவின் அம்மா பேச ஆரம்பித்தார்.."என்னதான் காதலிச்சாலும் எங்க குடும்பதுக்குனு ஒரு கௌரவம் இருக்கு அதனால,வர போற மருமக கோடி கோடியா கொண்டு வரலனாலும் ஏதோ நாங்க சொல்றது மட்டும் செய்யுங்க அது போதும்" என்றாள்.


                          சந்தோஷ் மனதில் திக்திக் என்றிருந்தது...அவர்கள் வாய் கூசாமல் தங்களுக்கு பிச்சையாக என்ன வேண்டும் என்பதை லிஸ்ட் போட்டு கேட்டார்கள்.சந்தோஷ் மனதில் ஓடியது "50 பவுன்..எப்படியாவது சமாளிக்கலாம்..கல்யான செலவு முழுவதும்...பிரச்சணை இல்லை..ஆனால் மாபிள்ளைக்கு கார்??.." சந்தோஷ் சம்மதித்தான்.மாபிள்ளை வீட்டார் சென்றனர்.செல்வா ஒரு வித களக்கத்துடன் தூங்க சென்றாள்.


                                          
                      சந்தோஷ் ஒரு வழியாக எல்லாவற்றயும் செய்து தன் மகளை அவள் காதலனுடன்..மணமக்களாய் அனுப்பி வைத்தான்.மூன்று மாதம் ஓடியது...செல்வா அப்பொழுது தான் புரிந்துகொண்டாள் ,வாசு அம்மா பிள்ளையாக அம்மா எது சொன்னாலும் சரி சொல்லும் பிள்ளையாக இருக்கிறான் என்று.
                      அவள் மாமியார் திடீர் என்று செல்வாவிடம் "உன் வீட்டுக்கு போய் 20பவுன் நகையுடன் இங்க வா..இல்லாட்டி அப்படியே போய்விடு" என்றாள்.வாசுவும் அமைதியாக நின்றான்.செல்வா அழுதுகொண்டே தன் வீட்டுக்கு சென்றாள்.சந்தோஷ் மனம் உடைந்து போனான்.தன் மகள் கஷ்ட படுவதை பார்க்க அவனால் முடியவில்லை.தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் சென்று கடன் கேட்டான்..அவனால் சிறிது அளவு கூட திரட்ட முடியவில்லை.செல்வா அவள் பிறந்த வீட்டில் இருந்தே வேலைக்கு சென்றாள்.இதற்கு நடுவில் வாசு ஒரு நாள் கூட செல்வாவுக்கு கால் செய்து பேசவில்லை.அவன் தான் அம்மா பிள்ளை ஆயிற்றே??.

                      சந்தோஷ் தன் ஆசை மகளுக்கு 'வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே' என்று எண்ணி எண்ணி படுத்த படுக்கை ஆனான்.செல்வாவுக்கு தன்னால் தான் தன் தந்தை இப்படி ஆகிவிட்டார் என்ற கவலை.ஒரு நாள் சந்தோஷுக்கு திடீரென்று நெஞ்சு வலி வந்தது...ஹொஸ்பிடல் கொண்டு சென்றனர்.டாக்டர் ஹார்ட் அட்டாக் என்று கூறினார்.செல்வாவுக்கு தூக்கி வாரி போட்டது..
                                                                       
                          அப்பொழுது வாசு வந்தான்.தன் மாமனாரை பார்க்க." இதுபோன்ற மனிதர்கள் காசுக்காக யாரயும் பலி குடுக்க தயங்க மாட்டார்கள்..பலி குடுத்தபின் வெட்கமே இல்லாமல் மரியாதை நிமித்தமாக பிணத்திற்கு மாலை போட வருவார்கள்".அப்படி தான் வாசு தன் மாமனாரை பார்க்க வந்தான்.அப்பொழுது செல்வா எதோ எழுதி வாசுவின் கையில் குடுத்தாள்.அதை படித்த வாசு ,தன்னை ஒரு கேவலமான பிறவி போல் உணர்ந்தான்..அதில் இருந்த வார்தைகள்,"இன்னும் என் அப்பா சாகவில்லை..அவர் இறந்த பின்பு வா..வந்து அவரின் நெற்றி காசயும் எடுத்துச்செல்."

Monday, 25 June 2012

நம்ம நித்தி Part-1.....

இப்பொ தமிழ் நாட்டுல டாப்ல இருக்குற ஆளு நம்ம நித்தி தான் ..அதனால என்னுடைய இரண்டாம் பதிப்பு நம்ம நித்தி தான் ...














      VS 










இது ஒரு சின்ன பேட்டி ..

இந்த பேட்டில யாருலாம் கலந்துக்க போறாங்கனு பார்தீங்கனா நம்ம 
1)நித்தி
 2)ரஞ்சிதா 
3)அப்புறம் நம்ம பெருசு ..அதாங்க நம்ம ஆதீனம் ..
 4)லாஸ்டா பேட்டி எடுக்க போற ஆளு நம்ம கௌண்ட மணி 
ஸ்டார்ட் த பேட்டி.....
 1)மணி:
                 சாம்ய் உங்க குடும்பத்த பத்தி கொஞ்சம் சொல்றீங்கலா? 
நித்தி: 
             பேசிகலி நான் ஆச்சாரமான குடும்பத்துல பொறந்தவன்....
 (மணி மைண்ட் வாய்ஸ்ல:  கொயாலே!!! நீயே ஆச்சாரமான குடும்பம்னா நாங்கலாம் என்ன பாம்பே ரெட் லைட் ஏரீயாலயா பொறந்தோம்?)
 2)மணி:
                நித்தி உங்களுக்கு எப்படி ஞானம் வத்துச்சுனு கொஞ்சம் சொல்றீங்கலா?

நித்தி:
            ஒரு நாள் நான் தியானம் பண்ணீட்டு இருந்தேன் ..அப்போ திடீர்னு ஒரு சப்தம் 
 (மணி மைண்ட் வாய்ஸ்ல: ஸ்டார்ட் பண்ணிடான்யா சட்டி தலயன் ....) என்னடானு கண்ணு முழிச்சு பார்தா.என் முன்னாடி தெய்வம் நிக்குது ....
மணி: அப்புறம் .... 

நித்தி: என்ன ஆன்மீக சேவைல எறங்க சொல்லுச்சு .....சொ 
நான் எறங்கிட்டேன்.. 
(மணி மைண்ட் வாய்ஸ்ல: எதோ கெணத்துகுல்ல எறங்குன மாதிரி சொல்றான் ...) 

3)மணி:
               சரி சாமி ...எப்படி இந்த மடம் லாம் கட்ட உங்களுக்கு இவ்ளோ காசு வந்துச்சு...? 
நித்தி: 
            எல்லாம் என் ஃபான்ஸ் எனக்கு ப்ரொவைட் பண்ணியது... 
(மணி மைண்ட் வாய்ஸ்ல: நீ கெட்ட கேட்டுக்கு இங்கலீசு வேற...)

4) மணி: 
             சாமி எப்படி உலகம் ஃபுல்லா பாபுலர் ஆனீங்க ?? 

நித்தி: 
            என் ஆன்மீக ஞானம் கண்டு உலகம் முழுக்க எனக்கு ஃபான்ஸ் வந்தாங்க ...

 மணி:
            எது சாமி ..அந்த சன் டீவீ ல ரஞ்சி கூட பிரேக் டான்சு ஆடுனீங்கலே அதுவா? 

நித்தி:சேச்ச ...அதுக்கு முன்னாடியே .... 

மணி:ஒ..அதுக்கு முன்னாடியே நெறயா டான்சு ஆடி இருகீங்கலா சாமி..இந்த சன் டீவீ ல ஒரு சீடி தான் போட்டாங்க..படுபாவி பசங்க....


5)
மணி:
          பார்தீங்களா....ரஞ்சிதாவ பத்தி நீங்க எதுவும் சொல்லவே இல்ல...??

 நித்தி: 
           அவரும் மற்ற பெண் சீடர்களை போல் தான் ....
 மணி:
          சும்மா டபாய்காதீங்க சாமி....அப்புறம் ஏன் அவங்க மட்டும் உங்களுக்கு பணிவிடை செய்றாங்க?..ஹெய் இப்போ என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ... 

நித்தி:
            எனக்கு நெறைய பெண்கள் பணிவிடை செய்கிறார்கள்...ஏண்ணிடம் வீடியோ ஆதாரம் உள்ளது...ஒரு சீடீ 30ரூபாய் ..வேண்டும் என்றால் கௌன்டெரில் பணம் கட்டி வாங்கி கொள்ளுங்கள்..

மணி:
            வேண்டாம் சாமி நான் சன் டீவீலேயே பார்த்து கொள்கிறேன் ....விட்டா நீங்க என் மூடயே மாத்தி விடுவீங்க போல...

 நித்தி:
          ஹா ஹா ஹா...எல்லம் அவன் திருவிளையாடல்கள்... 

Sunday, 24 June 2012

சகுனி.........ஒரு தலைவலி மாத்திரை ஆர்டர் பண்ணுங்கப்பா ..


 ரொம்ப நாள் கழிச்சு தம்பிய கூட்டிட்டு படத்துக்கு போலாம் நு முடிவு பண்ணி அம்மா கிட்ட 200rs வாங்கிட்டு போனேன் ...தியேட்டர் வாசல்லையே நம்ம கார்த்தி பெரிய cutout ல சிரிச்சுட்டு நின்னாப்ள ..அப்போவே எனக்கு மைல்ட் டவுட் வந்துச்சு ..சரி நம்ம சந்தானம் சகல இருக்காப்ல நு தைரியமாஹ்    போனேன்.டிக்கெட் 85rs ..

first  half  
#tweetku : இன்டர்வல்ல காபி குடிகலான உங்க உயிர்க்கு தியேட்டர் நிர்வாகம் பொறுப்பு அல்ல....
Detail :
தம்பி கார்த்தி intro  லாம் ஒன்னும் சொல்லிகுற மாதிரி இல்ல ..intro  சாங் லையே தியேட்டர்ல பாதி பேரு கடுப்பு ஆகிடாங்க ..(நான் சொல்லலைபா ..ஊர்ல பேசிகிட்டாங்க )
intro  முடிஞ்சா உடனே நம்ம சந்தானம் என்ட்ரி..ஹப்பா இனிமே தியேட்டர்ல விசில் சப்தம் தாண்டா சாமின்னு நினைச்சு காத close  பண்ண கர்சீப் ரெடி பண்ணேன்...ஆனா நான் கர்சீப் ரெடி பண்ணது விசில் சப்தம்த சமாளிக்க இல்ல குரட்ட சத்தத சமாளிக்க தான்னு பின்னாடி தான் எனக்கு புரிஞ்சது ...


கார்த்தி பணக்காரன்னு நினைச்சு நம்ம சந்தானம் கார்த்திய அவரு ஆட்டோல  ஏற சொல்லி உயிர் எடுக்குறாரு ..கார்த்தியும் change இல்ல change இல்லன்னு சொல்றாரு (அவரு பாஷைல change இல்லை நா காசு இல்லைன்னு அர்த்தம்மாம் ).

இத புரிஞ்சிகாத சந்தானம் change  இல்லாட்டி கார்ட் தெய்சுக்கலாம் வாங்கனு சொல்றாரு ..

சந்தானம் தொல்ல தாங்காம அவரும் வண்டில ஏறுறாரு ..அப்புறம் தான் ஸ்டார்ட் ஆகுது flashback லாம் ...கமலக்கண்ணன் (அதாம்பா நம்ம கார்த்தி..) ரஜினி அப்பாதுரை (அதான் நம்ம சந்தானம் ) பேரு combinationல தோஸ்த் ஆகுறாங்க(ஆகி தான ஆகனும்)

அப்புறம் என்ன flashback தான் ...கார்த்தியோட பூர்விக வீட்ட சப்வே கட்ட இடிக்க போறதா ஆர்டர் வருது ...உடனே கார்த்தியோட தாத்தா(நம்ம அசத்த போவது யாரு ல வருவாரு ல அவரு தான் ) கார்த்திகிட்ட பொலம்புறாரு ..ஊருக்கே சோறு போட்ட வீடு (வீடு எப்படி சோறு போடும்? ஒரு வேல வீட்ட வித்து வேணா சோறு சாப்டலாம் ).

உடனே கார்த்தி கேளம்புறாரு எங்க? வேற எங்க சென்னைக்கு தான்..

அப்புறம் கட்சி ஆபீஸ் அமைச்சர் ஆபீஸ்கு லாம் அலையறாரு...அமைச்சரோட family tree  la இருக்குற எல்லாரும் நம்ம ஹீரோவ அலைய வைக்குறாங்க ...அதுல ஒருத்தன் அவன் பொண்டாட்டி கார்த்திய சைட் அடிக்குறது பார்த்து கடுப்பு ஆகி கார்த்தி மேல போலீஸ் கம்ப்
ளைன்ட் குடுக்குறான் ..அங்க தான் அனுஷ்கா என்ட்ரி ..போலீஸ்!!!!!

எந்த டிரஸ் போட்டாலும் அனுஷ்கா அழகு தான்பா..அனுஷ்கா கார்த்திய பார்த்து .அவர பொண்ணு பார்க்க வந்த மாப்ளன்னு நினைச்சு காபி ஷோப்கு கூட்டிட்டு போறாங்க ..அங்க தான் கார்த்தியோட ஸ்டோரி கேட்டு அப்புறம் அவங்க mistake  ரியலிஸ் பண்றாங்க ..அப்புறம் கார்த்திய பார்த்து வலியுறாங்க (நமக்குலாம் இங்க கடுக்கு தாளிக்குற சௌண்ட background  மியூசிக் ஓடுது )

  அப்புறம் திடிர்னு ஆண்ட்ரியா வராங்க ..இப்படியே நம் உறவினர்கள் அனைவரும் வாரங்க ...

 கார்த்தி சாப்டுற எல்லாத்துக்கும் சந்தானம் தான் பைன் கட்ட்ராபுல ..including transformer ல மூத்திரம் போன கேஸ் வரைக்கும் ..


அப்புறம் heroine மீட் நடக்குது ..heroine வந்து நம்ம கார்த்தியோட அத்த பொண்ணு தான்..பார்த்து 15  வருஷம் ஆகுத .சந்தானம் புண்ணியம் ல இந்த சின்ன வயசு புப்பி லவ் லாம் 2second  ல கலாய்ச்சு முடிசுடுறாங்க.(இந்த கள்ளி செடி என்ன பாவம் பண்ணுச்சு ..எல்லா படத்துலயும் அத blade போட்டு கீறி நாசம் பண்றீங்க ..நான் சொல்றது puppy  லவ் சீன் பா )
 ..ரோஜா தான் அத்த ...(நமக்கு தான் வந்து வாய்குது ..ஒரு அத்த பொண்ணாவது வெள்ளையா இருக்கா இல்லை அத்த தான் ரோஜா மாதிரி இருக்கா.. வாட் எ பிட்டி ???)







ரோஜா தான் ரயில்வே மினிஸ்டர் கு பாமிலி டாக்டர் ..வீட்ட நான் மீட்டு தரேன் நு சொல்லி கார்த்திய வீட்டுல டிரைவர் வேளைக்கு வச்சுக்குறாங்க..அப்புறம் என்ன கார்த்தி heroine கு ரூட் விடுறாங்க ...ஒன்னும் வேளைக்கு ஆகல ..சரின்னு கார்த்தி கார் துடைகுராப்புல ..அப்போ heroine வந்து  "மாமா" நு சொல்லி பாசமழை பொளியுறாங்க(பசங்க வேல செஞ்சா தான் பொண்ணுகளுக்கு பிடிகாதே!!!).இவ்ளோ நாள் சும்மா வெளயாடுனேன் நு சொல்றாங்க,ஹீரோ லவ் பண்றாரு (பண்ணி தான ஆகனும் ..கார் தான் தொடைக்க விடல லவ் யாவது பண்ணலாம் நு தான்)..அப்புறம் பணக்கார அத்த ரோஜாக்கு லவ் மேட்டர் தெரிஞ்சு ...ஊர்ல இருந்து வந்து என் பொண்ண காசுகாக மயக்கி காமெடி பண்றியானு கடுப்பாகி கண்டிநியூஸ்  அஹ dialgoue  பேசுறாங்க ..ஹீரோ வெளிய வறாரு ...flashback  ஸ்டாப்...இப்போ தான் சந்தானம் realsie பண்றாரு இவன் கிட்ட காசே இல்லை நு..அப்புறம் என்ன தல சுத்தி ..கீழ விழுந்து எந்திரிச்சு காசு கேட்குறாரு...


உடனே கார்த்தி தாத்தா சொன்ன காரணத்துனால cm praksahraj  கிட்ட வறாரு (ரீசன்: பிரகாஷ்ராஜ் election அப்போ கார்த்தி வீட்டுல வந்து சாப்டு vote கேட்டு போய் இருக்காப்ல )..அங்க போனா கார்த்திய அவமானம் படுத்தி அனுப்புறாங்க ..சைடுல நம்மளையும் படுத்தி எடுக்குறாங்க .....




ஆடோக்கு due  கட்ட காசு இல்லன்னு அலறாப்புல சந்தானம் ...ராதிகா தான் ரமணி அக்கா..சந்தானம்கு காசு குடுத்த கந்துவட்டி அம்மா ..கார்த்தி சந்தானத்த கூட்டிட்டு ராதிகா வீட்டுக்கு போறாங்க ..அங்க ஒரு problem ஓடிட்டு இருக்கு ..உடனே நம்ம கார்த்தி ராதிகாவ counseller  election ல நிக்க சொல்லுறாரு ...ராதிகாக்கு பல்பு எரியுது ...சுத்தி இருக்குற ரௌடிக்கு அடிவயிறு எரியுது ...உடனே பஞ்ச் லாம் பேசி ராதிகாவ ரொம்ப சீண்டிவிட்டு ராதிகாக்கு தம்பி ஆகுறாரு..


After Head ache...
That is Second half:

Election காமெடி லாம் இங்க தான் ஸ்டார்ட் ஆகுது..ராதிகா வ பத்தி ஊரே கேவலமா பேசுது..ராதிகாவ சுத்தி இருக்குற ரவுடி லாம் இது வேலைக்கு ஆவது நு சொல்றாங்க...கார்த்தி விடுற மாதிரி இல்லை (பின்ன!! காசு குடுத்து இருக்கோம் ல நீ  நடத்து ராசா ).ரவுடி லாம் சோசியல் சர்வீஸ் செய்யுறாங்க ,பசங்களுக்கு கிரிக்கெட் பேட் பால் லாம் வாங்கி தராங்க..இங்க தான்  இதே வார்டு ல பிரகாஷ்ராஜ் கீப் கிரண் (செம ர்ஹைமிங் ல) நிக்குறாங்க ..லாஸ்ட் ல ராதிகா counsellor ஆகுறாங்க .. 



கிரண் தோக்குறாங்க..ராதிகா சென்னை சிட்டி mayor  ஆகுறாங்க ...கார்த்தி மேல சத்தியம் பண்ணி பதவி ஏற்குறாங்க(..அப்படியே எங்க பேரையும் போட்டுகோங்க ..காசு குடுத்து எங்கள நாங்களே காவு குடுத்து இருக்கோம் ல ???)

உடனே சந்தானம் ராதிகா PA ஆகுறாரு ..கார்த்தி சொல்லி ராதிகா பிரகாஷ்ராஜ் பில்டிங் லாம் இடிக்குறாங்க (சட்டத்துக்கு புறம்பா கட்டப்பட்டது !!)

உடனே கார்த்திய கஞ்சா கேஸ் ல உள்ள தூக்கி போடுறாங்க ..ஜெயில்ல கோட்டா ஸ்ரீனிவாசராவ் அஹ பாக்குறாரு ஹீரோ..(இவரு தான் எதிர் கட்சி தலைவர் ..கட்சி ஸ்டார்ட் பண்ணதுல இருந்தே தான்..)..ஹீரோ பேசி பேசியே அவர நல்லவரு ஆகுறாரு..ஹீரோ கோர்ட் ல போட்ட மொக்கை ல சந்தானம் ஜெயில் உள்ள வறாரு ..ஹீரோ வெளிய வறாரு ...வந்து கோட்டா ஸ்ரீனிவாசராவ் கூட சேர்ந்து கட்சியில் இருக்குற மொக்க ஆளுங்க எல்லாம் வெளிய அனுபுறாரு ..அவங்க லாம் பிரகாஷ்ராஜ் கூட join  ஆகுறாங்க ..கட்சி மேல கேஸ் போடுறாங்க ..கோட்டாவா ரோட்டுக்கு கொண்டு வறாரு ...(என்னதாண்டா நடக்குது இங்க நு தியேட்டர் பாதி பேரு தூங்கி எந்திரிச்சு உட்கார்ரங்க ...)

புதுசா கட்சி ஸ்டார்ட் பண்றாரு..அடிமட்ட தொண்டர்கள் வேட்பாளர் அஹ நிக்குறாங்க ..போட்டி ஸ்டார்ட் ஆகுது..



மாறி மாறி பிரசாரம் பண்றாங்க ..இங்க தான் பிரகாஷ்ராஜ் ஒரு ட்விஸ்ட் வைக்குறாரு..ஹீரோ அத அவுக்குராறு ...நம்மள கவுக்குராறு ...அப்புறம் என்ன கோட்டா வின்னிங் ..subway  ப்ராஜெக்ட் கேன்சல் பண்றாரு ..ரயில்வே ஸ்டேஷன் ல heroine  join ஆகுறாங்க ...(எம்மா எங்க போண நீ ...சொல்லாம கொல்லாம நீ பாட்டுக்கு வர...)..அப்புறம் என்ன கட்டுபுடி வைத்தியம் ..திடிர்னு ஒரு போன் கால்..வேற எங்க நார்த் ல இருந்து தான் ...நம்ம கார்த்திய problem solve  பண்ண சொல்லி பார்லிமென்ட் ல இருந்து  கூப்டுறாங்க ..இவரும் குல்லா

மாட்டிட்டு போஸ் குடுக்குறாரு ..அப்புறம்......




விட்டா கேட்டுட்டே இருபிங்க போல ...அவ்ளோ தாங்க


என்னபா பாட்டு எதுவும் இல்லையா நு கேட்குறீங்க லா ...இத படிக்கும் போது எங்க லாம் கடுப்பு வருதோ அங்க லாம் ஒரு பாட்டு போட்டுகோங்க ...(கொய்யாலே ..!!!)..
வீட்டுக்கு போகும் போது சாரிடான் வாங்கிட்டு போங்க ..gud nite


பி.கு.: இது என் முதல் பதிவு ..பிழை இருந்தால் மன்னிக்கவும் ..





வணக்கம் மக்களே!!!...

நான் சின்ன வயசுல இருந்தே நிறைய புக்ஸ் படிப்பேன் ..காலேஜ் வந்ததுல இருந்து நிறைய blogs படிக்க ஸ்டார்ட் பண்ணுனேன் ..இப்போ காலேஜ் 4th  year படிக்குறேன் ..அப்போ தான் எனக்கு strike  ஆச்சு ... ஏன் நாமலே ஒரு ப்ளாக் ஸ்டார்ட் பண்ண கூடாது ?? அதன் விளைவு தான் இது..ஏதோ எனக்கு தெரிஞ்சுது தெரியாதது சொறிஞ்சது சொரியாதது எழுதுறேன் முடிஞ்சா கொஞ்சம் படிச்சுட்டு சொல்லுங்கப்பா ...